பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள் கூட்டமைப்பிடம் மைத்திரி வேண்டுகோள்

unnamed 2 7
unnamed 2 7

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி வழியில் தீர்வு கேட்டு பிரிவினையை ஏற்படுத்த முயல்வதை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.”என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுயான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-  

“சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அரசு பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துவிட்டது. இந்தநிலையில், சமஷ்டி முறைமையிலான தன்னாட்சி தீர்வை கூட்டமைப்பினர் கேட்பது எந்த வகையில் நியாயமானது? இப்படியான கொள்கையைக் கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்.

தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதற்காக அரசு விரும்பாத தீர்வைக் கூட்டமைப்பினர் கேட்க முடியாது.

புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அந்தத் தீர்வு எந்த இனத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும். சகல இனத்தவர்களுக்கும் ஏற்றால்போல் அந்தத் தீர்வு வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும். இதுவே எனது ஆசை. இது நிறைவேற வேண்டும் என்பதே எனது விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.