இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்

poor
poor

‘உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது’ என்கிறார் பிரான்சை சேர்ந்த பாதிரியார் ஜோசப் ரெசின்கி. சிறு வயதிலேயே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக். 17ல் உருவாக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

‘குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தை முன்னேற்றி வறுமையை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. 2030ம் ஆண்டுக்குள் அனைத்து நிலைகளிலும் வறுமைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.