மட்டக்களப்பு – மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை

batti 1
batti 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்த மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்திச்சபை துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட விளையாட்டு அபிவிருத்திச் சபையின் தலைவருமான மாணிக்கம் உதயகுமார் எடுத்துகொண்ட முயற்சியின் பயனாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நடவடிக்கைக்கு அமைவாக இந்த மாவட்டத்தில் உள்ள மகளிர் கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேவையான சத்துணவுகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட திட்டத்தின்கீழ் அரசாங்க அதிபரின் வேண்டுகோளின் பெயரில் புலம் பெயர்ந்ததோருக்கான சர்வதேச அமைப்பின் நிதி உதவியில் மகளீர் உதைபந்தாட்ட துறையில் ஆர்வமுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், பாதணிகள் வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு உபகரணங்ளை கையளிக்கும் விசேட நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த மகளீர் உதைபந்தாட்ட உதவித்திட்டத்தின்கீழ் புலம் பெயர்ந்ததோர் சர்வதேச அமைப்பின் அணுசரனையில் அரசாங்க அதிபர் உதயகுமார் வேண்டுகோளின் பேரில் இன்று 17ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றும் காலை 8.30 மணி அளவில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.