68 வீதம் வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவு

1534230179 post master 2
1534230179 post master 2

வாக்காளர் அட்டைகள் நூற்றுக்கு 68 வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

வாக்காளர் அட்டைகள் விநியோகப்பணிகள் தொடர்பில் செய்திபிரிவு தொடர்பு கொண்டு வினவியதற்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய, 11026,558 வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வாக்களார்கள் அன்றைய தினம் வீட்டிலிருந்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.