ஐந்துகட்சிகள் தீர்மானங்கள் குறித்து வாசுதேவ விமர்சனம்!

Vasudeva Nanayakkara
Vasudeva Nanayakkara

ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் 13 தீர்மானங்களை உள்ளடக்கிய  கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, விடுதலை புலிகள் ஆயுதமேந்தி கோரியதை மறைமுக ஆவணங்களின் ஊடாக நிற‍ைவேற்ற இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.

அத்துடன் அரசியல் நோக்கங்களை கொண்ட அரசியல் கட்சிகளின் ஆதரவினை கோரவில்லை தமிழ் மக்களின் ஆதரவினையே கோருகின்றோம். அரசியலமைப்பின் 13 வது திருத்த உள்ளடக்கங்கள்  அனைவருக்கும் ஏற்றால்போல் பாதிப்பின்றி செயற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.