வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

0000 1
0000 1

மேல், சபரகமுவ, தென், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பேய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேபோல் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மழையுடனான வானிலை தொடரும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே குறித்த சந்தர்ப்பங்களில் மக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தோடு புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோர பகுதிகளில் கடலலையின் சீற்றம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.