இன்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 4

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 29 பேர் இன்றைய தினம் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 26 ஆயிரத்த 942 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 556 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

இதேவேளை, வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 55 பயணிகள் இன்று அதிகாலை நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கட்டாரில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

வெளிநாடுகளுக்கு சொந்தமான கப்பல்களில் பணிபுரியும் 47 இலங்கையர்களும், இலங்கையில் உள்ள தூதரங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேரும் இவ்வாறு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்கள் விமானநிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு முகாமில் தொற்றுறுதியானவருடன் தொடர்பினை பேணிய 3 பேருக்கும், சேனப்புர புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறதியாகியுள்ளது.

அத்துடன் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் ஈடுப்பட்டிருந்த நான்கு பேருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 665 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.