மஞ்சள் இறக்குமதி மீதான தடையில் அரசாங்கம் உறுதி

manchal
manchal

கடுமையான பற்றாக்குறை காரணமாக உள்ளூர் சந்தையில் விலைகள் அதிகரித்த போதிலும் எந்தவொரு சூழ்நிலையிலும் மஞ்சள் இறக்குமதி செய்யக்கூடாது என்ற கடுமையான முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஞ்சள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

மஞ்சள்  மியன்மார் மற்றும் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. எனினும் கொரோனா பரவல் காரணமாக இறக்குமதியானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு தற்போது உள்ளூர் நுகர்வுக்கு சுமார் 400,000 கிலோ மஞ்சள் தேவைப்படுகிறது.

எனினும், உள்நாட்டு மஞ்சள் செய்கையாளர்களுக்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மஞ்சள் இறக்குமதி முன்னெடுக்கப்படாதென அவர் குறிப்பிட்டார்.