26 வருடங்களாக மின்சாரம் இன்றி வசிக்கும் 17 குடும்பங்கள் மன விரக்தியால் பெரிதும் பாதிப்பு

Tamil News large 2331406
Tamil News large 2331406

வவுனியா சாந்தசோலையில் 20 வருடங்களாக காணி ஆவணம் , மின் இணைப்பு இன்றி 17 குடும்பங்கள் வசித்து வருகின்றன . வவுனியாவில் பல கிராமங்களில் மக்கள் காடுகள் அழித்து குடியேற்றப்பட்டடுள்ளதை முன்னுதாரணமாக கொண்டு எமக்கான காணி ஆவணம் மின் இணைப்பு என்பனவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தருமாறு அப்பகுதி மக்களினால் கோரிக்கை மகஜர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிகப்பட்டுள்ளது .

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் , 

வவுனியாவில் கடந்த யுத்த காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய ஆயுத குழுக்களால் வவுனியாவில் பல அரச தனியார் காணிகள் காடுகள் கையகப்படுத்தி பல இடம்பெயர்ந்து வந்த குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர் . இவ்வாறு கடந்த 1994 ஆம் ஆண்டு வவுனியா சாந்தசோலையில் இரண்டு பரப்பில் 26 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற வசந்தனினால் குடியேற்றப்பட்ட 17 குடும்பங்கள் அவர்கள் வசித்து வரும் காணி தனியார் ஒருவரின் பெயரில் இருப்பதாகத் தற்போது தெரிவித்து அங்கு குடியேற்றப்பட்ட மக்களுக்கு மின் இணைப்பு பெற்றுக்கொள்ள முயற்சித்தபோது இவ்விடயம் மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த 26 வருடங்களாக அவர்களின் கோரிக்கை தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்றது . 

இவ்விடயம் தொடர்பாக வழக்கு விசாரணைகள் கடந்த எட்டு வருடங்களாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது . 
இதனால் குறித்த 17 குடும்பங்களும் பாடசாலை மற்றும் தொழிலுக்கு செல்லும் பிள்ளைகள் மன ரீதியாகவும், உள ரீதியாகவும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் . இவ்வாறு மன விரக்தியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து நீதியை பெற்றுக்கொடுக்க எவரும் முன்வரவில்லை இங்குள்ள அரச திணைக்களங்கள் , மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இவ்விடயத்தில் கைவிரித்துவிட்டதால் கடந்த 26 வருடங்களாக மின் இணைப்பை பெற்றுக்கொள்ள 17 குடும்பம்  போராடி வருகின்றோம் .

வவுனியாவில் இவ்வாறு பல கிராமங்களில் பல விடுதலை இயக்கங்களால் குடியேற்றப்பட்ட மக்களுக்கு காணி ஆவணம் , மின் இணைப்புக்கள் வீதிகள் , பாடசாலைகள் , விளையாட்டு மைதானங்கள் போன்ற கிராம கட்டமைப்புகள் ஏற்படுத்தி கொள்ளப்பட்டதை முன்னுதாரணமாக கொண்டும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சாளம்பைக்குளம் பகுதியில் அரச காடு அழிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றியுள்ளர் .

இங்கு நாங்கள் கடந்த 26 வருடங்களாக குடியிருந்து வருவதையும் கவனத்திற்கொண்டு எமது காணிக்கான ஆவணம் மின் இணைப்பு போன்ற எமது அத்தியாவசிய கோரிக்கையினை செயற்படுத்தித்தருமாறும் அப்பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர் .