பிள்ளைகளை நல்லவர்களாக வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரினதும் பொறுப்பாகும்: கிழக்கு மாகாண ஆளுநர்

625.0.560.320.160.600.053.800.700.160.90 2 1

சமூகத்தில் ஒரு நல்ல, நல்லொழுக்கமுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பது ஒவ்வொரு பெற்றோரினதும் பொறுப்பாகும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – அக்போபுரா விமலக்ன தேரோவின் ஒழுங்குமுறை நாள் 22ஆம் திகதி திருகோணமலை சர்தபுரா புதிய சாலையில் நேற்றைய தினம் நினைவுகூரப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள குழந்தையைப் பெற்று, வளர்த்தெடுப்பது ஒவ்வொரு பெற்றோரினதும் பொறுப்பாகும். இல்லையென்றால், சமூகம் பெற்றோரை குறை சொல்லும்.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான பாதை கற்பிக்கப்பட வேண்டும். குழந்தைகள் கருப்பையில் இருக்கும்போதே இதனை தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிகழ்வின் போது 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பரிசு விநியோகம், உணவு வழங்கல் உள்ளிட்ட பல சமூக சேவைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90 2
625.0.560.320.160.600.053.800.700.160.90 1 1