எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் எங்கள் உறவுகளை மீட்பதற்கு

WhatsApp Image 2020 02 12 at 17.40.46
WhatsApp Image 2020 02 12 at 17.40.46

இலங்கையில் நடைபெற இருக்கும் நாடாளமன்ற தேர்தலில் சர்வதேச அரங்கில் இலங்கை அரசை காப்பாற்றி எமக்கு துரோகம் இழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு   உள்ளிட்ட சிங்கள கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தோற்கடித்து
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்குமாறு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆதரவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி அழைப்பு விடுத்துள்ளார்

அவர் மேலும்  தெரிவிக்கையில்

கடந்த 2009 ம் ஆண்டிற்கு பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சிறீலங்கா அரசிடம் நீதி கோரிப் போராடியபோதும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. எனினும் ஐ.நா மனித உரிமைப்பேரவையால்  கூட நீதி பெற்றுத்தருவது சாத்தியமற்றது என்ற நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விவகாரத்திற்கு நீதி பெற  ஐ.நா பாதுகாப்புச்சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

இவ்வாறான நிலைப்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீதி வேண்டி போராடி   வரும் நிலையில் அதற்கு மாறாக உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா அரசுடன் இணைந்து வலியுறுத்தி வந்துள்ளது. 
இலங்கை அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 16 பாராளமன்ற உறுப்பினர்களும் எமது உறவுகளை மீட்க விடாது சிங்களத்தின் சிறைக்குள் தொடர்ந்தும் பூட்டி வைத்திருக்க எத்தனித்து வருகின்னர்

கூட்டமைப்பின் அனைத்து பராளுமன்ற உறுப்பினர்களும் எமக்கு துரோகம் இழைத்து வந்துள்ளனர். இலங்கை அரசுக்கு ஐ.நாவில்  கால நீடிப்பினை பெற்றுக்கொடுத்துள்ளனர் அரசுடன் இணைந்து ஓ.எம்.பி.அலுவலகத்தை திறந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏமாற்ற கூட்டமைப்பு துணை போயுள்ளனர்.

ஓ.எம்.பி.அலுவலகத்தை தமிழர் தாயகத்தில் திறந்து மரண சான்றிதழ் வழங்க கூட்டமைப்பு உள்ளிட்ட சிலர் சிங்கள் பாராளமன்றில் தவமிருந்து ஓ.எம்.பி.அலுவலகம் திறப்பதற்கான சட்டம் பாராளமன்றில் நிறைவேற்றப்பட்டது
அவ்வாறான அலுவலகத்தில் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் பதிவு செய்யவேண்டிய நிலைக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டு மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன்  சுமந்திரன் ஆகியோர் ஜெனிவா செல்வது  சிங்கள அரசை பாது காப்பதற்காகவே மட்டும் என்பதே வெளிப்படையான உண்மையாகும்
சர்வதேசத்தில்  உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்கி, கால அவகாசம் வழங்கி அரசுக்கு முண்டு கொடுத்து எமது உறவுகளை தேடி அலைந்து நோயாளராகி சாகடிக்கப்பட்ட 70 மேற்பட்ட தாய் தந்தையரின் சாவுக்கு காரணமாக இருந்த  சீறீதரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் 16 எம்பிகளையும் எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் தோற்கடித்து கோத்தா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த அனைத்து உறவுகளும் முன்வரவேண்டும்  

இன அழிப்புக்கான ஆதாரங்கள் இல்லை என சுமந்திரன் வெளிப்படையாகவே சர்வதேச களங்களில் கூறினார். ஐ நா.நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை காட்டி சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது. எனக் கூறினார்
இத்தனை காலமும் அரசுடன் இணைந்து அவர்கள் செயற்பட்டுவிட்டு இன்று எமக்காக பேசுவது போன்றதான நாடகத்தினை தங்களது வாக்கு வங்கியை நிரப்புவதற்காஅரங்கேற்ற முனைகின்றனர்
நாங்கள் ஒருபோதும் கூட்டமைப்பையோ, சிங்கள அரசையோ நம்ப தயாரில்லை எமக்கான  நீதியை சர்வதேச  சமூகமே பெற்றுத்தர வேண்டும்.

சர்வதேச நீதி பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு இலங்கை அரசு மேற்கொண்ட அத்தனை குற்றங்களிற்கும் தண்டனை வழங்கப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்
உயிரோடு படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்தவர்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் படையினரால் கொடூரமாக சித்திரவதை செய்தும் உயிரோடு எரியூட்டியும் உயிரோடு அறுக்கப்பட்டும் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டவர்களுக்கும் நீதி இல்லை. 

பல நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு (Rape) மற்றும் பாலியல்; துஷ்பிரயோகம் (Sexual Abuse) போன்ற இனப்படுகொலைக் குற்றங்களில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா படையினருக்கு இன்றுவரை தண்டனை வழங்கப்படவில்லை. குறிப்பாக பல நூறு இராணுவத்தினர் முன்னிலையில் மிகக் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரிகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. யுத்த காலத்தில் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுக்களினாலும் வீதிகளிலும் வீடுகளிலும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்தும் கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட எமது அப்பாக்களை அண்ணாக்களை அக்காக்களை தேடி எமது அம்மாக்களும் உறவுகளும் கடந்த 10 ஆண்டுகளாக வீதி வீதியாக அலைகின்றார்கள்

எமது உறவுகள் காணாமல் போவதற்கு காரணமான முப்படையினரும் அவர்களுக்கு கட்டளையிட்டவர்களும் சுதந்திரமாக எம் முன்னிலையில் வலம் வருகின்றார்கள். உலகிலேயே மிகக் கொடூரமான சட்டமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை 2015ஆம் ஆண்டு சுட்டிக்காட்டியுள்ள இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டமானது இன்று வரை நீக்கப்படவில்லை. 
அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மிகக் கொடூரமான சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாகவும் தண்டனைக் கைதிகளாகவும் எமது உறவுகள் 20 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள் 

இன்று தமிழர் வாழ்வியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழர் தேசமெங்கும் முழுமையான இராணுவ மயமாக்கல் ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் விவசாயக் காணிகளை கைவிடாமை மீன்பிடித்தடை என எமது வளர்ச்சியினை தடுக்கின்றது சிங்கள அரசு. அது மட்டுமன்றி பெரும் தொகையான இராணுவத்தினர்,காவற்துறையினர், புலனாய்வுத்துறையினர், கடற்படையினரென எமது பிரதேசங்களில் குவிக்கப்பட்டிருந்தும் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி கஞ்சா வியாபாரம் தனியார் வீடுகளில் கொள்ளைகள் கொலைகள் மாணவர்கள் மத்தியில் கலாச்சார சீர்கேடுகளென பட்டியல் தொடர்ந்து கொண்டே போகின்றது.

இச்செயற்பாடுகள் தற்செயலானவையல்ல. நன்கு திட்டமிடப்பட்டு எமது சமூகத்தினை அழிக்கவே அனுமதிக்கப்படுகின்றது. 
தமிழ் மக்களை தொடர்ச்சியாக உரிமைகளற்ற அடிமைகளாக வைத்திருக்கவே சிங்கள அரசு விரும்புகின்றது
எனவேதான் நடைபெற இருக்கும் பாராளமன்ற தேர்தலில் 
சிங்கள தலைமைகளுக்கு வக்காளத்து வாங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தோல்வியடைய செய்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கொண்ட கொள்கையோடும், இனப்படுகொலைக்கும்,காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் விடுதலைக்கு சர்வதேச விசாரணையூடாக நீதியை வலியுறுத்தி நிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு அழித்து சர்வதேச விசாரணைக்கு பலம் சேர்த்து எமது உறவுகளை துரிதமாக மீட்டெடுக்க அனைத்து உறவுகளும் முன்வரவேண்டும் என  கேட்டு நிற்கின்றோம் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் எங்கள் உறவுகளை மீட்பதற்கு