வவுனியா வாக்களிப்பு நிலையங்களில் குளவிக்கூடுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

images 1 8
images 1 8

வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகள் பலவற்றில் குளவிக்கூடுகள் காணப்படுகின்றன.

வாக்களிப்பு தினத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மழை, காற்று கால நிலையினால் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படும் எனவும் அச்சம் வெளியிடப்படுவதால் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர் இணைந்து குறித்த குளவிக்கூடுகளை அகற்றி மக்களுக்கும் தேர்தல் கடமைபுரியும் அலுவலகர்களுக்கும் பாதுகாப்பான குழ்நிலையை தேர்தல் தினத்தன்று ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர் . 

இவ்வியடம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் வாக்களிப்பு நிலையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் சில பாடசாலைகளில் குளவிக்கூடுகள் காணப்படுகின்றன . கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்கள் குளவித்தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதுடன் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டு குளவிக்கூடுகள் அகற்றப்பட்டுள்ள சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக சாளம்பைக்குளம் , ஈரப்பெரியகுளம் , புதுக்குளம் , சிதம்பரபுரம் , வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் குளவிக்கூடுகள் காணப்படுகின்றன . 
கடந்த ஆறு மாதகாலமாக பாடசாலைக்கு நீண்ட விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளதால் பாடசாலையைச் சூழவுள்ள பகுதிகளிலுள்ள குளவிக்கூடுகள் தற்போதைய மழை காற்றுடனான கால நிலையால் கலைந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் வாக்காளர்கர்கள் , கடமை புரியும் அலுவலகர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது . 

எனவே அமைதியான தேர்தலை நடாத்துவதற்கு அதிகாரிகள் ஆவணம் செய்யுமாறும் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற தபால் வாக்களிப்பு நிலையமான வவுனியா பிரதேச செயலகத்திற்கு சென்ற அரச ஊழியர் ஒருவர் அங்குள்ள பனை மரத்தில் பாரிய குளவிக்கூடு ஒன்றினை அவதானித்துள்ளதுடன் அது குறித்து அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .