10 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி ரஞ்சன் ராமநாயக்க மனு தாக்கல்

51a78148 7efe4ec1 9da663c7 f4b1f5f0 ranjan r 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
51a78148 7efe4ec1 9da663c7 f4b1f5f0 ranjan r 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

ஒழுக்காற்று விசாரணை இல்லாமல் கட்சி செயற்குழுவால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்படுவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே மனுவின் விசாரணை முடிவடையும் வரை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவை அமுல்படுத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு குறித்த மனுவில் ரஞ்சன் ராமநாயக்க கோரியுள்ளார்.

குறித்த மனுவிற்கு பிரதிவாதிகளாக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் கரியவாசம், பிரதி தலைவர் ரவி கருணநாயக்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்ததற்காக ஜூலை 27 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்க உட்பட 54 பேர் கட்சியின் உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கட்சியின் முடிவின் காரணமாக அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியும் குறித்த மனுவை ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.