சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு!

download 4 2
download 4 2

எஸ்.எஃப் லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் 2015ம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராட்டே சாம்பியனான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எஃப் லொக்கா என்ற எரோன் ரணசிங்க சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அனுராதபுரம், தஹாயியாகம சந்தியில் உந்துருளியில் பயணித்த அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எஸ்.எஃப் லொக்காவின் பலியானதுடன், அவர் பயணித்த மகிழுந்து தீப்பற்றி சேதமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த மகிழுந்தில் எஸ். எஃப். லொக்காவின் பெண் தோழியும் பயணித்துள்ள நிலையில், அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற நீதவான் பரிசோதனைகளின் பின்னர், அநுராதபுரம் பிரதான நீதவான் ஜனக்க பிரியந்த சமரசிங்கவினால் காவல்துறைக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரி-56 ரக தானியங்கி துப்பாக்கியில் சுமார் 8 துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.