33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு!

a60a7c7c 6ce6 4925 944f 23f3042ebc0f
a60a7c7c 6ce6 4925 944f 23f3042ebc0f

நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புத்தளம் தொகுதியிலிருந்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையும் தெரிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட சிந்தக்க அமல் மாயாதுன்ன 46,058 விருப்பு வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் தேசிய கூட்டணி தராசு சின்னத்தில் போட்டியிட்ட அலிசப்ரி ரஹீம் 33, 509 விருப்பு வாக்குகளையும் பெற்று 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தொகுதியிலிருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சரான பரீஷ்டர் நெய்னா மரிக்கார், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இறுதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.