5 கிலோகிராம் கேரள கஞ்சா போதை பொருளுடன் ஒருவர் கைது!

85158 1
85158 1

மன்னார் பரப்பாங்கண்டல் பகுதியில் 5 கிலோகிராம் கேரள கஞ்சா போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய உந்துருளியில் பயணித்த ஒருவரிடம் இருந்து குறித்த கேரளா கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் – பெரியகருசல் பகுதியில் 350 கிராம் கேரள கஞ்சா போதை பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் – பெரியகருசல் பகுதியை சேர்ந்த ஒருவரே விசேட அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.