பெண் உள்ளிட்ட மூன்று நபர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!

arest
arest

ஹெரோயின் போதைப்பொருள் 107 கிராம் மற்றும் 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்த பெண் உள்ளிட்ட மூன்று நபர்களை ஹோமாகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹோமாகம-உடுவன பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்த மின் தராசு மற்றும் ஹொரோயின் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 48 வயதுடையவர்கள் என்பதோடு கைதான பெண்ணுக்கு 24 வயது எனவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.