ஹட்டன் செல்லும் சாரதிகளுக்கு காவல்துறையினரின் வேண்டுகோள்

unnamed 3 3
unnamed 3 3

ஹட்டன்-நல்லதண்ணி வீதியில் வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறுகின்றன. மோஹினி எல்ல பிரதேசத்தில் உள்ள பாரிய மண்மேடு பகுதியளவில் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் கூறினர்.

மண்மேடு இடிந்து விழுந்ததன் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது குறித்த வீதியில் நிரம்பியிருந்த மண் அகற்றப்பட்டு வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின. ஆனாலும் குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் அவதானமாக பயணிக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.