தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் நியமனம் நிறுத்தப்படவில்லை– சுமந்திரன்

M.A.Sumanthiran
M.A.Sumanthiran

தமிழரசுக் கட்சியினரால் தேசியப் பட்டியல் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசனின் நியமனம் நிறுத்தப்படவில்லை என்று ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய எஸ்பிஎஸ் தமிழுக்கு வழங்கிய நேர்காணலில்  தேசியப்பட்டியல் சர்ச்சை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நடைபெற்ற முடிந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவால் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடிக்கப்ட்டனர்.

இந்நிலையில் அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரே ஒரு ஆசனத்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட பெரும்பான்மையானோர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  

இந்தக் கோரிக்கைக்கு மாறாக  சுமந்திரன் சிறீதரன் கூட்டு சம்பந்தன் அவர்களின்  ஆசிர்வாதத்துடன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஊடாக தேசியப்பட்டியல் நியமனத்திற்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து கலையரசனைப் பரிந்துரைசெய்திருந்தனர். இந்த முடிவுக்கு எதிராக மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இந் நியமனம் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்திருந்தார்.  ஆனால் இச் செய்தியானது பொய் எனவும் கலையரசன்தான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாமன்றம் செல்வார் எனவும் சுமந்திரன் தற்போது  தெரிவித்துள்ளார்.