2.5 பில்லியன் ரூபா மேலதிகமாகத் தேவை – தேர்தல்கள் செயலகம்!

election dept
election dept

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக, திறைசேரியில் இருந்து மேலதிகமாக 2.5 பில்லியன் ரூபாயினை வழங்குமாறு தேர்தல்கள் செயலகம் கோரியுள்ளது.

எனவே ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவு 7 பில்லியன் ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு 4.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டபோதும் இம்முறை தேர்தலில் போட்டியிட 35 வேட்பாளர்கள் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு கூடுதல் நிதியை கோரியிருந்தது.

அதன்பிரகாரம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டிற்கான அதன் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் இருந்து 1 பில்லியன் ரூபாயினை ஒதுக்க திறைசேரி ஒப்புக்கொண்டிருந்தது.

இந்நிலையில் இதனை விடுத்து மேலதிகமாக 2.5 பில்லியன் ரூபாயினை தேர்தல்கள் செயலகம் கோரியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.