மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் – குருநாகல் மாநகர மேயர்

download 12 1
download 12 1

தன்னை கைது செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட பிடியாணையினை இரத்து செய்யுமாறு கோரி குருநாகல் மாநகர மேயர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாகக் கூறப்படும் இடத்திலிருந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பாக குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை நீதிமன்றத்தினூடாக பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு முன்னர் பணிப்புரை விடுத்திருந்தார்.

இருப்பினும் குறித்த பிடியாணை உத்தரவை பொலிஸார் நிறைவேற்ற தவறிய நிலையில் மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவை கைது செய்வதற்காக 4 விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.