பாராளுமன்றத்தின் அரசாங்கத்தின் பக்கம் அமரவுள்ள அதாவுல்லாஹ்

hytf 1
hytf 1

அரசாங்கத்துக்கு ஆதரவளித்து பாராளுன்றத்தில் ஆளுங்கட்சி பக்கம் அமரப்போவதாக ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.மொஹமட் சியா குறிப்பிடுகையில்,

“பொதுத் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெருமுனவுக்கு ஆதரவளித்து, ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட 18கட்சிகளில் எமது தேசிய காங்கிரஸும் அதில் ஒரு கட்சியாகும்.  பொதுத் தேர்தலில் திகாமடுள்ள மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டதன் மூலம் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் வெற்றிபெற்றார்.

பொதுத் தேர்தலில் அரசாங்கத்துக்கு தேசிய பட்டியல் உறுப்பினர்கள் அடங்களாக 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அத்துடன் கூட்டுக்கட்சிகளான ஈ.பி,டி.பி. இரண்டு ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும் சிவநேசதுறை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டதன் மூலம் புதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் செயற்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே தேசிய காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பூரண ஆதரவளித்து எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது  தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பாராளுமன்றத்தின் அரசாங்கத்தின் பக்கம் அமரவுள்ளார்” என தெரிவித்துள்ளார்.