தேசிய பட்டியல் உறுப்புரிமை கிடைக்கப்பெறுவதில் ஐயப்பாடு: மனோ கணேசன்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 11 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 11 1

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த தேசிய பட்டியல் உறுப்புரிமை கிடைக்கப்பெறுவதில் ஐயப்பாடு உருவாகியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றிருந்தது.

இதனையடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தேசிய பட்டியலை காரணம் காட்டி ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை சிதைக்க தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தேசிய பட்டியல் உறுப்புரிமை வழங்கப்படாவிடின் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் என மனோ கணேஷன் தமது பேஸ்புக் கணக்கில் எச்சரித்திருதுள்ளார்.

கடந்த 43 வருடங்களாக மலையத்துக்கு என காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி தற்போது இல்லாமல் போயுள்ளமை கவலையளிப்பதாக மலையக மக்கள் முன்னணயின் தலைவர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எமக்காகவே வாக்களித்துள்ளனரே தவிர சின்னத்திற்காக வாக்களிக்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு குறிப்பிட்டுள்ளார்.