இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 15 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 15 1

உலகின் முதல் கோரோனா தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷ்யா அறிவிப்பதற்கு முன்னதாக இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதர் பேராசிரியர் எம்.டி.லமவன்சாவின் தலைமையில் மாஸ்கோ பிராந்தியத்தின் டெமிகோவில் COVID-19 ஐ எதிர்த்துப் போராடி நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு இலங்கை தேயிலையை ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தூதர் லாமவன்சாவுக்கும் டாக்டர் கார்பூனுக்கும் இடையில் வைரஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசியின் பங்கு குறித்து விவாதித்துள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிராக புதிய தடுப்பூசி தயாரித்த உலகின் முதல் நாடு ரஷ்யா என்று இலங்கை மிஷன் தலைவர் மிகவும் பாராட்டியுள்ளார்.