ஹக்கீம், ரிஷாத்தை தாக்க வேண்டாம்- பசில் ராஜபக்‌ஷ

pasil
pasil

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகிய அமைச்சர்களை இடைவிடாமல்
தாக்குவதை தவிர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்‌ஷ தனது கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அவர்கள் அரசாங்க அமைச்சர்கள் என்று விமர்சிக்கப்பட்டாலும், அவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை கூறும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்‌ஷ வெற்றி பெறுகின்ற போதிலும், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான போராட்டம் நவம்பர் 18ஆம் திகதி தொடங்கும் இதன்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியாத சூழ்நிலையை உருவாக்குவது மிகவும் தீர்க்கமான காரணியாக இருக்கக்கூடாது என்று பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான எம்.பி.க்கள் இல்லாததால் ஹக்கீம் மற்றும் பதியுதீன் ஆதரவை பெறுவது கட்டாயமாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அவர்களை விமர்சிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் பயங்கரவாதத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என்று பசில் ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.