போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 45 பேர் கைது!

arest 3
arest 3

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 45 பேரும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது,

திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருட் கடத்தல்களை இல்லாதொழிப்பதற்காக நாடலாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்புகளுக்கமைய , போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்கிஸ்ஸ மற்றும் தெஹிவலை பொலிஸ் பிரிவுகளிலும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இவர்கள் அனைவரும் பொலிஸாரின் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன்போது போதைப் பொருள் கடத்தல் மற்றும் அதனை நாட்டுக்குள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனால் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் இந்த கடத்தல் காரர்கள் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்