தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் வழமைக்கு! – அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்கிறார் பொது முகாமையாளர்

.jpg

நாடு முழுவதும் இன்று பிற்பகல் 12.45 மணி முதல் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்த நிலையில் இரவு 7 மணி முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கெரவலப்பிடிய உப மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதான மின் விநியோகக் கட்டமைப்பு செயலிழந்தது எனவும், இதனால் நாடு பூராகவும் மின் தடை ஏற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரத் தடைக்கான காரணம் கண்டறிந்து அமைச்சுக்கும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கும் உரிய வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும், அதனடிப்படையில் எதிர்காலத்தில் இவ்வாறான விடயம் இடம்பெறாத வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.