வேகத்தை குறைத்து விவேகமாக செயற்படுவதால் விபத்துக்களை குறைக்கலாம்; யமுனாநந்தா

IMG 20200526 WA0025
IMG 20200526 WA0025

யாழ் மாவட்டத்தில் தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றது வேகத்தை குறைத்து விவேகமாக செயற்படுவதன் மூலமே விபத்துக்களை குறைக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது  வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தாக்கத்தின்  பின் போக்குவரத்து முடக்கங்கள் காணப்பட்டதன்  காரணமாக விபத்துக்கள் குறைந்து காணப்பட்டது. இலங்கையிலேயே வீதி விபத்துகளால் இறப்பு ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என்ற நிலை இருந்தது 
ஆனால் 6ம் மாதத்திற்குப் பின்னர் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த மாதம் மட்டும்  யாழ் வைத்தியசாலையில் சுமார் 180 பேர் வீதி விபத்துக்களினால் காயப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஒரு சிலர் இறந்துள்ளார்கள் பலர் வீதி விபத்துக்கள் இடம்பெற்ற ஸ்தலத்திலேயே இறந்துள்ளார்கள் 
இந்நிலையிலே  வீதி விபத்துக்கள் எவ்வாறு  ஏற்படுகின்றன அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

பொதுவாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட வீதி விபத்துக்களை ஆராய்ந்தபோது பாதசாரிகளை வாகனங்கள் மோதி வீதிகளிலே காயப்பட்டு நினைவிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து பிரிவினை எடுத்துக்கொண்டால் விபத்து பிரிவில் 70 சதவீதமானவர்கள் வீதி விபத்துக்களால் காயமடைந்து நிரந்தர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். 

நகரப்பகுதிகளில் கனரக வாகனங்கள்  பயணிக்கின்ற தன்மை தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. வேகமாக செல்லும் போதும் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன எனவே வேகத்தை குறைத்து விவேகமாக  பயணிப்பதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.