கழிவு நீர் மாதிரிகளை பயன்படுத்தி இந்திய விஞ்ஞானிகள் கொரோனா ஆய்வு!

111379737 gettyimages 1203446227 1
111379737 gettyimages 1203446227 1

இந்திய விஞ்ஞானிகள் ஐதராபாத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகளை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அங்குள்ள 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில் சுமார் 2 இலட்சம் பேர் வைரஸ் பொருட்களை வெளியேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

ஐதராபாத்தில் 40 சதவீத கழிவுநீரே, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை வந்தடைவதால் இந்த தரவு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த பயன்படுகிறது.

அந்த வகையில் ஏறத்தாழ இந்த எண்ணிக்கை 6.6 இலட்சமாக மாறி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.