மத்திய வங்கி கடனட்டை தொடர்பில் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!

download 38
download 38

மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அதன் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதங்களில் பேணுவதென இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நேற்று (19) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளினை சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் இன்னமும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லையாகையால் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினை தொடரவேண்டிய அவசியத்தினை சபை அங்கீகரித்திருக்கிறது.

மிக அதிகமாகவிருப்பதாகக் கருதப்படுகின்ற குறிப்பிட்ட சில வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு இலக்கிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சபை தீர்மானித்திருக்கிறது.

இது, சிறியளவிலான கடன்பாட்டாளர்களுக்கு உதவும். குறைக்கப்பட்ட பணவீக்க நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, சபையானது ஒட்டுமொத்த சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் மேலும் குறைவடையுமெனவும் அதன் மூலம் உற்பத்தியாக்க பொருளாதார நடவடிக்கைகளுக்கான கடன்பாடுகளை ஊக்குவிக்கப்படுமெனவும் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் அதேபோன்று பரந்த பொருளாதாரத்திற்கும் வலுப்படுத்தப்பட்ட ஆதரவினை வழங்குமெனவும் எதிர்பார்க்கிறது.

இதேவேளை, கடனட்டை தொடர்பில் தற்போதுள்ள வருடாந்த வட்டி வீதத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொடுகடன் அட்டைகள் மீதான உயர்ந்தபட்ச வட்டித்தை 18 % ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.