நாடாளுமன்ற கன்னி அமர்வின் வைபவ ரீதியான நிகழ்வுகளும் புதிய புகைப்படங்களும்

20 1 1

9ஆவது நாடாளுமன்றத்தின் வைபவ ரீதியான நிகழ்வு நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் மிகவும் சாதாரணமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுதல் மற்றும் வாகன அணிவகுப்பு போன்றவை இடம்பெறவில்லை.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக முப்படையினரின் பங்களிப்புடனான கலாசார நடனம் மாத்திரம் இடம்பெற்றது.

அதனையடுத்து முதல் நிகழ்வாக விருந்தினர்களின் வருகை இடம்பெற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகைத் தந்தனர்.

அதன் பின்னர் புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நாடாளுமன்றுக்கு வருகைத் தந்தார்.

அதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றுக்குள் பிரவேசித்தார்.

புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் ஜெய மங்கள கீதம் இசைக்கப்பட்டதுடன், ஜனாதிபதியின் கொடி ஏற்றப்பட்டது.

இதனையடுத்து அரசியல் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தினார்.