வன்னியில் ஆசிரியர்கள், வைத்தியர்களின் பற்றாக்குறை நிவர்த்திக்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை

வன்னி மாவட்டத்தில் நீண்டகாலமாக வைத்தியசாலைகள், பாடசாலைகளில் நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு. திலீபன் தெரிவித்துள்ளார் .

நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள திலீபன்  மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி கோட்டபாயவிற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு கூறியுள்ளார்

மேலும் நீண்டகாலமாக காணி உறுதிகள் பெற்றுக்கொள்ள முடியாமலிருப்பதையும் கவனத்திற்கொண்டு இக்கோரிக்கையினை விரைவுபடுத்தி பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார் . 

இதேவேளை நேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறித்த விடயங்கள் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.