தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் கிருமி தொற்று நீக்கம்

IMG 20200821 WA0024
IMG 20200821 WA0024

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியது.

இந் நிலையில் தற்போது நாட்டிலுள்ள  கொரோனா  தொற்று  அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி  சமூக இடைவெளியினை பேணி  ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தின் உற்சவ காலத்தில் நாட்டின் அனைத்துப் பகுதியிலுமிருந்து அடியவர்கள் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளும் நிலையில் ஆலயப் பகுதியில் கொரோனா தொற்றினை  கட்டுப்படுத்தும் முகமாக வல்வெட்டித்துறை நகரசபையின் சுகாதார பிரிவினரால்  ஆலய பகுதியில் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடானது இரவு வேளைகளில் ஆலயத்தின் உட்புறம் மற்றும் வெளி  வீதிகளில் முன்னெடுக்கப்படுகிறது .

IMG 20200821 WA0027
IMG 20200821 WA0027
IMG 20200821 WA0025
IMG 20200821 WA0025
IMG 20200821 WA0015
IMG 20200821 WA0015