இலங்கையின் வரலாற்றில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம்; தேவசிறி

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 4

இலங்கையின் வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடித்ததை போன்று தோற்கடிக்க முடியாத பலமான அரசாங்கம். என பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் மேலும் 15 ஆண்டுகள் இருப்பதற்காக மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் மிகவும் பலமானது. அதனை 1970ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துடன் மாத்திரமே ஒப்பிட முடியும்.

கோட்டாபயவின் கீழ் 15 ஆண்டுகள் வாழ மனதை தேற்றிக்கொள்ள வேண்டும் என நான் 2009ஆம் ஆண்டு கூறினேன். 2015ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது மகிந்த ராஜபக்சவின் திட்டமே அன்றி கோட்டாபயவின் திட்டம் அல்ல.

கோட்டாபயவின் அரசாங்கம் மகிந்தவின் அரசாங்கம் அல்ல. மகிந்தவின் அரசாங்கத்தை கவிழ்த்தது போல கோட்டாபயவின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான மாற்று சக்தியை கண்களுக்கு எட்டிய தூரத்தில் காணமுடியவில்லை.

இதனால், அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் வெற்றிகளை தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அரசாங்கத்திற்கு எதிராக வாயை திறக்க முடியும் எனவும் நிர்மல் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.