மின்சக்தி அமைச்சரின் திடீர் முடிவு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 21 1 620x330 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 21 1 620x330 1

“நாட்டில் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறுக்கு மின்சக்தி அமைச்சே பொறுப்புக் கூற வேண்டும் என சுட்டிக்காட்டப்படுமானால் அமைச்சுப் பதவியை நிச்சயம் துறப்பேன்.”

  • இவ்வாறு மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த திங்கட்கிழமை திடீர் மின்துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் 8 மணிநேரத்துக்கு மேலாக முழு நாடும் ஸ்தம்பித்தது.

இதனையடுத்து இது தொர்பில் ஆராய்வதற்கு மின் சக்தி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கை நாளை மாலை மின் சக்தி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையில் திடீர் மின்வெட்டுக்கு மின்சக்தி அமைச்சுதான் பொறுப்பு என்று மேற்கோள் காட்டினால் தான் உடன் பதவி விலகத் தயராகவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.