வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும்; நிதி இராஜாங்க அமைச்சர் உறுதி

1598157413 ajith 2
1598157413 ajith 2

வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வழிமுறைகள் அறிமுகப்படுத்துவது அவசியம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

நாட்டின் பாரம்பரிய கைத்தொழில் உற்பத்திகளுக்கு அதிகபட்ச கேள்வியை ஏற்படுத்துவது அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூர் உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முதலீடுகளை வலுப்படுத்தக்கூடிய பொறிமுறையொன்றைத் தயாரித்து தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கு உள்ளூர் உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது” – என்றார்.