அரசியல் தீர்வு இப்போதைக்கு சாத்தியமில்லை-கெஹலிய ரம்புக்வெல

keheliya rambukwella 1 2
keheliya rambukwella 1 2

வடக்கு, கிழக்கு மக்கள் நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்பனவற்றுக்கு இரண்டாம் இடத்தையே கொடுத்துள்ளனர். அவர்கள் முதல் இடத்தை அபிவிருத்திக்கும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவுமே ஆணை வழங்கியுள்ளனர். எனவே, அரசியல் தீர்வு இப்போதைக்கு சாத்தியமில்லை.”என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது அரசைப் பொறுத்தவரை அடுத்த 5 ஆண்டுகளில் அரசியல் தீர்வு என்பது இரண்டாம் பட்சமாகும். அபிவிருத்திக்கே முன்னுரிமை அளிப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாங்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அரசியலிலும் சாதிக்கவில்லை; அபிவிருத்தியும் செய்யவில்லை. அன்றாட வாழ்க்கையை  முன்னேற்றமும் தமிழ் மக்களினால் முடியவில்லை.  அதனால் நாம் அரசியல் அதிகாரத்தைப் பின்னர் பார்ப்போம்    என்றும், தற்போது அரசை ஆதரித்து அபிவிருத்தியையும் அன்றாட வாழ்வையும் பெறுவோம் என்றும் மக்கள் எண்ணியுள்ளனர்.

காரணம் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாங்கள் வடக்கு, கிழக்கில் மெகா அபிவிருத்திகளைச் செய்தோம். பாடசாலை, மருத்துவமனை, யாழ்தேவி, மின்சாரம், மீன்பிடி போன்ற துறைகளில் பாரிய சேவையை ஆற்றினோம். ஆனால், 2015இல் அரசியல் அதிகாரத்தைத் தருவதாகக்  கூட்டமைப்பினர் கூறினர். ஆனால், என்ன நடந்தது? அதுதான் இம்முறை தமிழ் மக்கள் மாறிவிட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.