குருநாகல் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பிடியாணை இடைநிறுத்தம்

c6a519fd 21ad8a83 7ab6b8f0 court 1 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
c6a519fd 21ad8a83 7ab6b8f0 court 1 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

குருநாகல் அரச சபை கட்டடம் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண உட்பட 05 பேரைக் கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் நீதிபதி சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மனுவின் விசாரணை நிறைவடையும் வரை இந்த இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வுத்தரவு மூலம் இச்சம்பவம் தொடர்பான விசாரணை செய்யும் பொலிஸாருக்கோ அல்லது, நீதிபதியின் விசாரணைக்கோ எந்தவித தடையும் இல்லை என நீதிபதிகள் குழாம் வலியுறுத்தியுள்ளது.