100 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹேரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

1595419948 hrroin 2
1595419948 hrroin 2

சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான 11 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, தல்வத்த மற்றும் ரத்கம பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, டி56 ரக துப்பாக்கிகள் இரண்டும் மற்றும் கைத்துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.