விவசாயத் திணைக்களத்தினால் விவசாய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

201812130325199614 When spraying the drug in the fieldsPractices to be SECVPF
201812130325199614 When spraying the drug in the fieldsPractices to be SECVPF

அம்பாறை அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலய எல்லைக்குட்பட்ட சிறப்பான விவசாய நடைமுறையின் கீழ் செய்கை பண்ணப்படும் பண்ணைகளுக்கு மத்திய அரசாங்க விவசாயத் திணைக்களத்தினால் விவசாய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பள்ளிக்குடியிருப்பு பிரதேச சபையில் விவசாயப் போதனாசிரியர் எம்.ஜே.எம்.றஜாய் அவர்களின் ஏற்பாட்டில் நிலையப் பொறுப்பதிகாரி வீ.நாகேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது, சிறப்பான விவசாய நடைமுறைகள் மற்றும் இரசாயனப் பாவனையினால் ஏற்படும் தொற்றா நோய்கள், சூழல் பாதிப்பு, வீண்விரயம் தொடர்பில் துறைசார் நிபுணர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.

சிறப்பான விவசாய நடைமுறைகளை பின்பற்றும் பொருட்டு அரசாங்கம் விவசாய திணைக்களத்தினால் பல்வேறுபட்ட ஆலோசனைகளையும், உதவிகளையும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாராகவுள்ள நிலையில், பண்ணையாளர்கள் அதனைப் பெற்று நன்மையடைபவர்களாக மாற வேண்டுமெனவும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பள்ளிக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. றாசிக் பிரதம அதிகாரியாகவும், அம்பாறை மாவட்ட விவாசாய வியாபார ஆலோசனை பிரிவின் மாவட்டப் பொறுப்பாளர் எம்.எம்.எம்.ஜெமீல் தொழினுட்ப வளவாளராகவும், விவசாயத் திணைக்கள அதிகாரிகள் எப்.நிப்ராஸ் மற்றும் எம்.ஏ.சில்மியா ஆகியோருடன் சிறப்பான விவசாய நடைமுறையில் ஈடுபடும் பண்ணை விவசாயிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.