கொழும்பு மாவட்ட நிலங்களின் பெறுமதி அதிகரிப்பு

2c930cd569d471bc282288496913f40b
2c930cd569d471bc282288496913f40b

கொழும்பு மாவட்ட நில மதிப்பீட்டு குறியீட்டுக்கு அமைய வருடத்தின் முதல் அரையாண்டில் நிலங்களின் மதிப்பானது நூற்றுக்கு 7.1 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஆகவே ஆண்டின் முதல் அரையாண்டில் நில மதிப்பீட்டு குறியீடு 141.6 ஆக பதிவாகியுள்ளது.

இது இவ்வாண்டின் இரண்டு சதவீத வளர்ச்சியாகும். குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்துறை நில மதிப்பீட்டு குறியீட்டில் ஆண்டின் உயர்ந்த வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாகவும், குடியிருப்பு மற்றும் வணிக நில மதிப்பீட்டு குறியீடு 7.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.