கோப் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

1571837662 cope 2
1571837662 cope 2

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு, அரச கணக்குகுழு ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கப்படவுள்ளது.

இவ்விரு குழுக்களிலும் ஆளுங்கட்சியின் சார்பில் 10 பேரும், எதிரணிகளின் சார்பில் 06 பேரும் மொத்தம் 16 பேர் அங்கம் வகித்தனர்.

இந்தநிலையில் ஆளுங்கட்சியின் சார்பில் மேலும் ஐவரையும், எதிரணிகளின் சார்பில் மேலும் மூவரையும் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்படி குழுக்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

9 ஆவது நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது மேற்படி குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இவ்விரு குழுக்களினதும் தலைமைப்பதவி எதிரணிக்கு அவசியம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின்போது கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.