மைத்திரியைக் சுமார் 10 மணி நேரம் துருவியது விசாரணைக்குழு!

213af326 e0eb5181 president 850x460 acf cropped 1
213af326 e0eb5181 president 850x460 acf cropped 1

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று 10 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவரின்  இல்லத்திலிருந்து வெளியேறினர்.

மைத்திரிபாலவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதற்காக விசாரணைக் குழுவின் அதிகாரிகள் நேற்றுக் காலையே மைத்திரிபாலவின் இல்லத்துக்குச் சென்றனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க வருமாறு முன்னாள் ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடந்த வாரம் விடுக்கப்பட்டிருந்த  அழைப்பை அவர் நிராகரித்திருந்தார்.

தன்னால் விசாரணைக் குழுவுக்கு வர முடியாது எனவும், தனது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தனது வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் விசாரணை குழுவுக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.