சாதாரண தர பரீட்சைக்கான திகதியை தீர்மானிக்கும் தகவல்கள் சேகரிப்பு

9

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்த தகவல்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்னன.

இதற்காக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகளிலிருந்தும் இது குறித்த அறிக்கை கிடைத்தவுடன், பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித்த தெரிவித்துள்ளார்.

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் Online ஊடாகவே கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை சுமார் 2 இலட்சம் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Online ஊடாக விண்ணப்பிக்கும் போது சிக்கல்கள் ஏற்படுமாயின் 1911 தொலைபேசி இலக்கதிற்கு அழைக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.