2300 கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது

sea card
sea card

முல்லைத்தீவு, புதுமாதலன் கடற்கரையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அனுமதிபத்திரம் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 12 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகம் ஒக்.22.ல் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு சட்டவிரோதமாக பிடித்த 2300 கடல் அட்டைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 04 டிங்கி படகுகள், 04 வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் 36 முதல் 40 வயதுக்குட்பட்ட கற்பிட்டி மற்றும் திருகோணமலை பகுதியில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைதீவு மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதே தினத்தில் நல்லூர் கடற்கரையில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த மற்றும் கொண்டு சென்ற 11 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.