பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்யவதை அரசாங்கம் தடைசெய்ய நடவடிக்கை!

ddddddddddd

பல பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடைசெய்ய உள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த பொருட்களை தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட வேண்டிய பொருட்களில் பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் கரண்டிகள் மற்றும் பல பொருட்கள் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தவிர சில அலுமினிய பொருட்கள் மற்றும் பொலித்தீன் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் இருந்து பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடை அமைச்சரவைக்கு தெரிவிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறினார்.