யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பெண் ஊழியர் ஒருவர் பலி

urder 1591829533
urder 1591829533

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மேலும் அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்தாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 17ஆம் நோயாளர் விடுதியிலிருந்தே  அந்தப் பெண் நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.