சீனாவில் 2 மாடி கட்டிடம் இடிந்து விபத்து 29 பேர் பலி

unnamed 2 9
unnamed 2 9

சீனாவில் 2 மாடிகளை கொண்ட உணவு விடுதி இடிந்து நொறுங்கிய விபத்தில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஷன்ஜி மாகாணத்தின் லென்சன் நகரில் இந்த விபத்து நேரிட்டது. உணவு விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்து நிகழும் போது உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 29 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.