நீதியமைச்சர் அலி சப்ரியின் முயற்சி!

ali
ali

இலங்கையின் கலாசாரத்தில் 70 முதல் 80 வீதமானவை சிங்கள, பௌத்த கலாசாரத்தையே பிரதிபலிக்கின்றன.

எமது சமூகம் உட்பட எல்லா சமூகத்திலும் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடும் வகையில் குறிப்பிட்ட சில தரப்பினர் இருக்கின்றனர்.

அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தவே தாம் முயற்சிப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி மகாநாயக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மல்வத்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்

குறைந்த வயது திருமணங்களை தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியல் யாப்புக்கு இணைவாக, பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் கடமையாற்றுவதற்காகவே தான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறு வயதிலிருந்தே சிங்கள அரிச்சுவடியை கற்றுள்ள தான், இஸ்லாம் மதத்தவராக இருந்தபோதும் இலங்கையின் கலாசாரத்திற்கு அமைவாகவே வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நல்லதொரு இலங்கையராக ஏனைய சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அனைவரும் முன்நிற்கவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.