ஆர்வலர்களின் ஆதரவு தேவை: நந்தகுமார்!

IMG 20200905 WA0025
IMG 20200905 WA0025

வலுவிழந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவு தேவையென வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கத்தின் உபதலைவர் வைத்தியர் க.நந்தகுமார் தெரிவித்தார்

வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்க வருடாந்த கூட்டத்தின் பின் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

“வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கம் மாற்று வலுவுடையவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எங்களுடைய பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்வந்த மாற்று திறனாளிகளுக்கு சில பயிற்சிகள் முக்கியமாக தையல் பயிற்சி, மாலை கட்டுதல், கதிரை பின்னுதல் காகித உரை மடித்தல் அவர்களால் செய்யக்கூடிய அவர்களால் என்ன செய்யமுடியுமோ அவர்களை அந்த துறையில் வளர்த்து விட்டு அவர்களை சொந்த காலில் நின்று தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டது தான் இந்த நிறுவனம்.

1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பத்திலிருந்து இன்றைய தினம் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது இந்த நிறுவனத்தில் செயற்பாடுகளில் மாற அவர்கள் ஒவ்வொரு நாளும் வீடுகளிலிருந்து இந்த நிறுவனத்திற்கு வருகைதந்து பயிற்சி பெறுவது கடினம் அவர்களுக்காக தங்குமிட வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்

அதேபோல் எமது நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குறித்த பயிற்சிகளை நிறைவு செய்து தமது சுய தொழில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றார்கள். அத்தோடு எமது நிறுவனத்தில் விற்பனை நிலையம் காணப்படுகின்றது அத்தோடு எமக்கு வெளியிடங்களில் இருந்தும் பல ஓடர்கள் நிறுவனத்திற்கு கிடைக்கின்றன இதன் மூலம் எமது வலுவிழந்தோர் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடியதாக இருக்கின்றது. இந்த செயற்பாடு மேலும் விரிவடைய வேண்டுமாயின் சமூக ஆர்வலர்கள் மற்றும் கொடையாளிகளின் ஆதரவு கிடைக்குமிடத்தில் எமது இந்த நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி அடைந்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி புரியும்” எனவும் அவர் தெரிவித்தார்.